மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அத்வானி, அண்மையில் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.