அஸ்ஸாமில் கொட்டித் தீர்த்த கனமழையால் தலைநகர் கவுஹாத்தியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம், இன்னும் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
மேலும் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். காஸிரங்கா தேசிய புலிகள் சரணாலயத்தில், மழைக்கு 92 விலங்குகள் உயிரிழந்ததாகவும், 95 விலங்குகள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.