பாரம்பரிய தற்காப்புக் கலைகளை ஒட்டு மொத்த சமூகமும் கற்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் எண்ணித்துணிக எனும் பாரம்பரிய தற்காப்பு கலை ஆசான்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தற்காப்புக் கலைகளை ஒட்டு மொத்த சமூகமும் கற்க வேண்டும் என வலியுறுத்தினார். மன அழுத்தம் காரணமாக இன்று பலர் மருத்துவர்களை அணுகும் சூழலில், தற்காப்புக்கலை அதற்கு மருந்தாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும், தற்காப்புக் கலை ஆசான்களை கவுரவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.