அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.
இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் கணக்கில் வராத ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சார்பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.