கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பச்சிளம் குழந்தையை அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மாதையன் – சின்னம்மா தம்பதியருக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ச்சியாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த மாதையன், பச்சிளம் குழந்தையை வீட்டினருகே இருந்த பாறையில் அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.