காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டு 3 மாதங்களே ஆன ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வகுப்பறை சீலிங் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குருவிமலை பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையின் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வகுப்பறையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தரமாக கட்டடங்களை கட்டித்தர வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.