நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை விற்பனை குறித்து கிடைத்த தகவலின் பேரில் ஆழியூர் சுற்று பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த குடோன் ஒன்றில் விற்பனைக்காக 75 கிலோ புகையிலைப்பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் கலந்தர் நைனா முகம்மது, மற்றும் செய்யது முகம்மது புகாரி ஆகியோரை கைது செய்தனர்.