தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் நினைவுத் தூண் திறப்பு விழா நடைபெற்றது.
அந்தவகையில் கட்டாலங்குளம் அழகுமுத்து அரி கிருஷ்ணர் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்ட நினைவுத் தூண் மற்றும் கல்வெட்டை, யாதவ மகாசபை நிறுவனத் தலைவர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்.
அப்போது பாஞ்சாலங்குறிச்சியில் குமார அழகுமுத்து என்ற நூலையும் அவர் வெளியிட்டார். இவ்விழாவில் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.