அகஸ்தியர் அருவியில் நீராட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது அகஸ்தியர் அருவி.
இங்கே சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே, அருவிக்கு வரும் பயணிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் கொண்டுவந்துள்ளார்களா என பரிசோதனை செய்த பின்னரே அனுமதிப்படுகின்றனர்.