உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தனது சொற்பொழிவைக் கேட்க வந்த பக்தர்கள் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததை எண்ணி தாம் மிகவும் வருந்துவதாக சாமியார் போலே பாபா வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து சாமியார் போலே பாபா தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தனது பக்தர்கள் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழந்தவர்களை எண்ணி தாம் வருந்துவதாக கூறிய போலே பாபா, அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மன வேதனையிலிருந்து மீண்டுவர பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு நிர்வாகத்தின் மீது பாதிக்கப்பட்டோர் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், இந்தக் குளறுபடிக்கு காரணமானவர்கள் தப்ப முடியாது என்றும் வீடியோ பதிவில் சாமியார் போலே பாபா கூறியுள்ளார்.