நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான 9 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 9 பேர் மாயமாகிவிட்டதால் அவர்களைத் தேடும் பணியில் நேபாள பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இயற்கைப் பேரிடர் காரணமாக 47 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல வங்கதேசத்திலும் கனமழையால் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறி, முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.