குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரையில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ரத யாத்திரையானது ஜமால்பூர், கமாசா, ஏஎம்சி அலுவலகம், ராய்பூர் சக்லா உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்றது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஜெகந்நாதர் ரத யாத்திரையையொட்டி, 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அகமதாபாத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.