ஆன்லைன் ரம்மி உயிரிழப்பு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Sep 16, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்லைன் ரம்மி உயிரிழப்பு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 7, 2024, 04:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை திமுக அரசு வேடிக்கை பார்க்கப் போகிறது என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்ன மணலியை சேர்ந்த அங்கமுத்து என்ற விசைத்தறி உரிமையாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் கடனாளியாகி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் அடிமையாக்கி அழிக்கும் என்பதற்கு அங்கமுத்து தான் மோசமான எடுத்துக்காட்டு என்று கூறியுள்ள அன்புமணி, பா.ம.க. நடத்திய போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், அந்தத் தடையை நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், இதற்கான தடையை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Online Rummy Death - Anbumani Ramadoss Condemned!
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் உள்ள சிவன் ஐம்பொன் சிலையை மீட்க வேண்டும்!- முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல்

Next Post

ஜெகந்நாதர் ரத யாத்திரை- லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

Related News

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies