பீகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீகாரில் பெய்த கனமழை காரணமாக ஜெகனாபாத் மாவட்டத்தில் 3 பேர், மேதபுரா மாவட்டத்தில் இருவர், கிழக்கு சாம்பரான், ரோதாஸ், சரண் மற்றும் சர்பால் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் ஒன்பது பேர் கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.