கடலூர் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே வந்தபோது சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து ஓட்டுநர் ராஜா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.