திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொத்தூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பாக, அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் காணொலி மூலம் நடைபெற்றது. அப்பாேது, “பெரம்பூரில் 7 ஆயிரத்து 500 சதுர அடி அளவுக்கு இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அங்கு அதிகமான குடியிருப்புகள் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். மேலும், பொத்தூர் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.
அத்துடன், “இறந்தவரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். இதையடுத்து நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.