அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்ராங் மாவட்டத்தில் மார் ஒன்றரை லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மிதக்கிறது.
114 விலங்குகள் உயிரிழந்த நிலையில், 15 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.