ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த சிறுமிக்கு முதன்முதலாக ஆதார் அட்டை எடுப்பதற்காக , ஆதார் சேவை மையத்துக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். பிற நடைமுறைகள் முடிந்த பிறகு புகைப்படம் எடுப்பதற்காக அச்சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர்.
அப்போது அவர், தனது கன்னத்தில் கை வைத்து உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இஸ்டாகிராமில் ஒரு கோடியே 80 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.