மும்பையின் ஓர்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலியானார்.
கோலிவாடாவை சேர்ந்த பிரதீப் – காவேரி தம்பதி இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அதிவேகமாக சென்ற சொகுசு கார் அவர்களின் வாகனம் மீது மோதியது. இதில் பிரதீப் தூக்கி எறியப்பட்ட நிலையில், காவேரி சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.
இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காவேரி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஷிண்டே சிவசேனா அணியை சேர்ந்த ராஜேஷ் ஷா, அவரது மகன் மிகிர் ஷா மற்றும் கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.