ஹரியானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 40 மாணவர்கள் காயமடைந்தனர்.
பஞ்ச்குலா அருகே பிஞ்சோர் பகுதியில் 40 மாணவர்களுடன் இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
திடீரென அந்தப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 40 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.