நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை வழியாக சென்று மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
அதன்படி வழக்கம் போல் நெல்லையிலிருந்து புறப்பட்ட ரயில் கல்லிடைக்குறிச்சி நிலையத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அங்கு ஏற மற்றும் இறங்க இருந்த பயணிகளும் கூச்சலிட்ட படி ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முன்பதிவு செய்திருந்த பயணிகள் மாற்று ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கு ஓட்டுநர் கவனக்குறைவே காரணம் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கவும், பெரும் விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.