பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் 2-ஆம் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று ரத யாத்திரையைத் தொடங்கிவைத்தார். முன்னதாக கோயிலின் உற்சவர்களான ஜெகநாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோரது சிலைகள் ரதங்களில் நிர்மாணிக்கப்பட்டன.
அப்போது பக்தர்கள் ஜெய் ஜெகநாதா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். இரவு முழுவதும் வீதியுலா சென்ற ரத யாத்திரை இன்று 2-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர். ஜெகநாதர், பலபத்திரர், சுபத்திரை என மூன்று உற்சவர்களின் ரதமும் இன்று மாலை நிலையை சென்றடையும்.