சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக, சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருணை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அதுகுறித்து கடுமையாக விமர்சித்து வந்தன. இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது.
தற்போது, சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண், சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.