மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகள் ஆகியவை நமக்குள் ஆழமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன: குடியரசுத் தலைவர்!
Jan 17, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகள் ஆகியவை நமக்குள் ஆழமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன: குடியரசுத் தலைவர்!

பூரி கடற்கரையில் சிறிது நேரம் கழித்த குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புனித நகரமான பூரியின் வருடாந்திர ரத யாத்திரையில் நேற்று பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை கடற்கரையில் சிறிது நேரம் செலவிட்டார். பின்னர் அவர் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அனுபவத்தைப் பற்றி தமது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது  எக்ஸ் தளத்தில்,

“வாழ்க்கையின் சாரத்துடன் நம்மை நெருக்கமாக  இணைக்கும்  இடங்கள் பல உள்ளன.  நாம் இயற்கையின் ஒரு பகுதி என்பதை அவை நினைவூட்டுகின்றன. மலைகளும், காடுகளும், ஆறுகளும், கடற்கரைகளும் நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை ஈர்க்கின்றன.

இன்று நான் கடற்கரையில் நடந்து செல்லும்போது, சுற்றுப்புறங்களுடன் ஒரு ஒற்றுமையை உணர்ந்தேன் – மென்மையான காற்று, அலைகளின் கர்ஜனை, மகத்தான நீர் விரிவு. அது ஒரு தியான அனுபவமாக அமைந்தது.

நேற்று மஹாபிரபு ஸ்ரீ ஜகந்நாதரை நான் தரிசனம் செய்தபோது நான் உணர்ந்த ஆழ்ந்த உள் அமைதியை அது எனக்கு அளித்தது. அத்தகைய அனுபவத்தைப் பெறுவது நான் மட்டுமல்ல; நம்மை விட மிகப் பெரிய, நம்மை தாங்கி நிற்கிற, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிற ஒன்றை நாம் எதிர்கொள்ளும்போது நாம் அனைவரும் அப்படித்தான் உணர முடியும்.

தினசரி வாழ்க்கையின் அவசர யுகத்தில், இயற்கை அன்னையுடனான இந்தத் தொடர்பை நாம் இழக்கிறோம். மனிதகுலம் இயற்கையை ஆக்கிரமித்து, தனது சொந்த குறுகிய கால நன்மைகளுக்காக அதைப் பயன்படுத்தி வருகிறது. இதன் விளைவு அனைவரும் காண வேண்டிய ஒன்றாகும்.

இந்தக் கோடையில், இந்தியாவின் பல பகுதிகள் பயங்கரமான தொடர் வெப்ப அலைகளைச் சந்தித்தன. சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கிலும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. வரவிருக்கும் தசாப்தங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான பகுதி கடல்களால் சூழப்பட்டுள்ளது, மேலும் புவி வெப்பமயமாதல் உலகளாவிய கடல் மட்டங்களில் உயர்வுக்கு வழிவகுக்கிறது, கடலோரப் பகுதிகளை மூழ்கடிக்கும்  அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கடல்களும், அங்கு காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவை பல்வேறு வகையான மாசுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக, இயற்கையின் மடியில் வாழும் மக்கள் நமக்கு வழி காட்டக்கூடிய பாரம்பரியங்களை நிலைநிறுத்தியுள்ளனர். உதாரணமாக, கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள், காற்று, கடல் அலைகளின் மொழியை நன்கு அறிந்தவர்கள். நம் முன்னோர்களைப் பின்பற்றி கடலைக் கடவுளாக வழிபடுகின்றனர்.

சுற்றுச்சூழலின் பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்; அவை அரசுகள், சர்வதேச அமைப்புகளிடமிருந்து வரக்கூடிய விரிவான நடவடிக்கைகள்,  குடிமக்களாக நாம் எடுக்கக்கூடிய சிறிய, உள்ளூர் நடவடிக்கைகள்  ஆகும். இரண்டும் ஒன்றையொன்று நிரப்புபவை. சிறந்த எதிர்காலத்திற்காக நம்மால் இயன்றதைத் தனியாகவும், உள்ளூரிலும்  செய்ய உறுதியேற்போம். நம் குழந்தைகளுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” எனத தெரிவித்துள்ளார்.

Tags: Mountainsforestsriversbeaches have a deep attraction in us: President!
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் வெள்ளப் பெருக்கு- முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு!

Next Post

3-ம் கட்ட அகழாய்வு: சுடுமண்ணாலான பொருட்கள் கண்டெடுப்பு!

Related News

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரில் பிரதிஷ்டை!

அல் பலா பல்கலை.யின் ரூ.140 கோடி சொத்துக்கள் முடக்கம் – டெல்லி கார்குண்டு வெடிப்பு வழக்கு!

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர்

பாரத ரத்னா MGR பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வாழ்த்து

அரசு வேலையில் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை – முதலமைச்சர் ஸ்டாலின்

ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி திமுக MLA இருவரையும் அமர வைத்து சாரட் வண்டி ஓட்டிய மாவட்ட ஆட்சியர்

திருப்பரங்குன்ற விவகாரத்தில் உயிரிழந்த பூர்ண சந்திரனுக்கு மலை மீது மோட்ச தீபம் ஏற்றிய கிராம மக்கள்!

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – அசத்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட EPS!

திரௌபதி இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை -இயக்குநர் மோகன்ஜி

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

போட்டி தாமதமாக தொடங்கியதால் 100 காளைகள் அவிழ்க்கப்படாத அவலம்!

எம்ஜிஆர் பிறந்தநாள் – அமித்ஷா புகழாரம்!

“மும்பையில் டிரிபிள் என்ஜின் சர்க்கார் அமைந்துள்ளது” – பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா!

“மலை டா! அண்ணாமலைடா இது..!” – அண்ணாமலை பிரசாரம் – பாஜக வேட்பாளர் அமோக வெற்றி!

“ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது” – முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies