சந்தேஷ்காளி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சந்தேஷ்காளியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் நில அபகரிப்பில் ஈடுபட்டதுடன், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களை அரசு பாதுகாக்க முற்படுவது ஏன் என கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.