கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
’லிங்காபுரம் – காந்தவயல் பகுதியை இணைக்கும் பாலம் வழியாக ஏராளமான மணல் லாரிகள் செல்கின்றன. இந்நிலையில் பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறி அந்த வழியாக சென்ற மணல் லாரிகளைபொது மக்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.