மும்பையில் கனமழையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், மும்பை பொறுப்பு அமைச்சர் எம்.பி.லோதா, மீட்பு மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பாட்டீல் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரண உதவிகள் செய்து தரப்பட வேண்டுமென இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.