தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
ஆலங்குளம் அடுத்த அணைந்தநாடார்பட்டி கிராமத்தில் இருந்த 80 அடி ஆழ திறந்தவெளி கிணற்றுக்குள் மயில் ஒன்று தவறி விழுந்தது.
இதனை அவ்வழியே சென்ற விவசாயிகள் கண்டு அம்பை தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தத்தளித்த ஆண் மயிலை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.