ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்த 3 நாட்கள் பயணம் அருமையான வாய்ப்பாக இருக்கும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் அழைப்பின் பேரில் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடி, இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆஸ்திரியா செல்லும் அவர், அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசவுள்ளார்.