சென்னையில் பல்வேறு இடங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றுக்கான பெயர் எப்படி வந்தது? தலைநகரின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கி காணாமல் போன கிராமங்கள் எத்தனை என்று தெரியுமா?
தமிழ்நாட்ல இருக்க ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஆனா மொத்த தமிழ்நாட்டுக்கே சிறப்பான ஊருனா அது சென்னைதான். ஏன்னா இது ஊரு இல்ல குட்டி தமிழ்நாடு. பிற மாநிலத்துக்குக்காரங்களும் வசிக்கிறதால சென்னைய குட்டி இந்தியானு சொன்னாலும் தகும்.
பல்வேறு காரணங்களுக்காக பல ஊர்கள்ல இருந்து சென்னை வர்றவங்களுக்கும் சரி… அங்கேயே டேரா போட்டு தங்கிருக்கவங்களுக்கும் சரி… சென்னை எப்பவுமே ஸ்பெஷலான ஊரு. கல்வி மற்றும் பொருளாதாரத்துல எந்த படிநிலைல இருந்தாலும் சென்னையில் சந்தோஷமா வாழ முடியும். காசுக்கேத்த தோசைய சாப்பிட்டுட்டு காத்தாடிய பறக்கவிட்டுட்டு காலத்த ஓட்டிக்கலாம். உழைக்க தயாரா இருந்தா தைரியமா சென்னைக்கு வரலாம். இங்க வேலைக்கு பஞ்சமே இல்ல… சாதிக்கலவரத்தால ஒரு குடிசகூட எரிஞ்சதில்ல. அப்படி ஒரு அம்சமான ஊரு.
இப்ப விஷயம் என்னன்னா? சென்னையில இருக்க பல பேருக்கே அவங்க இருக்க இடத்தோட பெயர் காரணம் தெரியல.
கிண்டி பக்கம் போனாலே கத்திப்பாரா Bridge-ல ஒரு Round அடிப்போம்னு நினைக்கறவங்க நிறையப்பேரு. கத்தி வச்ச துப்பாக்கியோட மிலிட்டரிக்காரங்க Parade போனதால இந்த இடத்துக்கு கத்திபாரானு பேரு வந்ததா சொல்றாங்க. ‘பாரா’-னா பந்தோபஸ்துனு அர்த்தமாம். மிலிட்டரிக்காரங்க கத்தி வச்சுக்கிட்டு பந்தோபஸ்து பணில ஈடுபட்டதால இந்தப்பேருனு சொல்றவங்களும் உண்டு.
இதே மாதிரி, நுங்கு அதிகம் விளைஞ்ச இடம் நுங்கம்பாக்கம்னும், சையது என்பவர் வியாபாரம் செஞ்ச இடம் சையது பேட்டையாகி அப்பறம் சைதாப்பேட்டைனும் ஆகிடுச்சாம்.
குதிரை வண்டிங்க அதிகம் இருந்ததால ‘கோடோ பாக்’-னு அழைக்கப்பட்ட இடம் கோடம்பாக்கம்னு மாறிடுச்சாம். ‘கோடோ பாக்’-னா உருது மொழில குதிரை லாயம்னு அர்த்தமாம். தென்னை மரங்கள் அதிகமா இருந்த தென்னம்பேட்டை பின்னாட்கள்ல தேனாம்பேட்டைனும், மயில்கள் ஆடிய ஊர் மயிலாப்பூர்னும், பிரம்பு காடு அதிகம் இருந்த இடம் பெரம்பூர்னும், பூவரச மரங்கள் நிறைய இருந்த இடம் புரசைப்பாக்கமா மாறி அப்பறம் புரசைவாக்கமா ஆயிருச்சுன்னும் சொல்றாங்க.
இந்த பெயர் காரணங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னைக்கு சென்னையோட முக்கியமான சில இடங்கள் அந்தக் காலத்துல அழகான கிராமங்களா இருந்துச்சாம். வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், புளியந்தோப்பு, திருவொற்றியூர், எண்ணூர், நங்கநல்லூர்னு நிறைய கிராமங்கள் சென்னை MAP-க்குள்ள ஒளிஞ்சுகிடக்கு.
அளவுக்கு அதிகமான ஜனத்தொகையால சில பல சங்கடங்கள் இருந்தாலும் சென்னை எப்பவுமே சூப்பர் சிங்கம்தான்.