பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அண்ணாமலை அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் 20 ஆண்டுகள் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துதோம். தமிழகத்தில் இது போல ஒரு நிகழ்வு நடந்தது இல்லை, நடந்திருக்க கூடாது. ஒரு கட்சியின் தலைவர் அவரது சொந்த இடத்திலேயே கொல்லப்பட்டு உள்ளார். இதனை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் இது குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டு தெரிந்து கொண்டனர். நாளை காலை 11 மணி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். தமிழகத்தில் பட்டியலின தலைவர்கள் படுகொலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டினார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா, மனித உரிமை ஆணையரிடம் நாளை புகாரளிப்போம் எனத் தெரிவித்தார். அரசியல் படுகொலையா என விசாரிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக உள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
முதல்வர் இதனை தீவிரமாக எடுக்காமல், எதனை தீவிரமாக எடுத்து வருகிறார் என தெரியவில்லை, புலி பாய்ச்சல் இல்லாமல், ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறார்
தமிழகத்தில் கூலிப் படையினருக்கு இடம் இல்லை என்பதை கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.
அரசியலை தாண்டி கட்சி என்றும் உங்களுடன் இருக்கும் என மறைந்த தலைவரின் குடும்பத்திடம் தெரிவித்து விட்டு வந்துள்ளேன். பாஜக தொண்டர் ஏதாவது ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்தால், எதற்காக திமுக அவர்களை காப்பாற்ற போகிறது?
எங்கள் கட்சியில் சமூக விரோதிகள் வந்து சேர்த்தது போன்ற வரலாறு இல்லை எனத் தெரிவித்தார்.