மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை மற்றும் புனேவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, மும்பை, தானே, ராய்காட், பால்கர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில், மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பையின் பல்வேறு இடங்களில் பேருந்து மற்றும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மும்பை மற்றும் புனேவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது