தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் 6 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.