மதுரை எம்பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பேச வேண்டும் என்பதை மறந்து, பிரதமர் மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்ற ஒரே நோக்கில் பேசி வருவதாக பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செங்கோல் வளைந்ததற்காக உயிரை விட்ட பாண்டிய மன்னன் இருந்த மதுரை மண்ணிலிருந்து வந்த சு.வெங்கடேசன் செங்கோல் குறித்து அவதூறாகப் பேசுவது கண்டனத்திற்குரியது என்றும் திலகபாமா தெரிவித்துள்ளார்.