ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தின.
தாளவாடி அடுத்த சேஷன் நகரை சேர்ந்த மல்லு என்பவரின் விவசாய நிலத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.
யானைகளை விரட்ட முயற்சித்தும் காட்டிற்குள் செல்லாமல் விவசாய நிலங்களிலேயே யானைகள் முகாமிட்டுள்ளன.