மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலத்தில் குவிண்டாலுக்கு 3000 முதல் 4000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.