கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரியை களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்ட எல்லையில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் வழியாக எந்த விதமான சோதனையும் மேற்கொள்ளாமல், இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த மினி லாரியை களியக்காவிளை பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் படந்தாலுமூடு பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அச்சமடைந்த ஓட்டுநர், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார். போலீசாருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, இறைச்சி கழிவுகளை தமிழக பகுதியில் கொட்டி செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.