உக்ரைனில் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 2 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை, உள்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷியா, ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். 171 பேர் படுகாயமடைந்தனர்.