பிரான்ஸ் நாடாளுமன்றத் நடைபெற்ற தோ்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால், அந்நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
577 இடங்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறுவதற்கு 289 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இடதுசாரி கூட்டணியான புதிய மக்கள் முன்னணி 180 இடங்களிலும், அதிபா் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கூட்டணி 159 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தொங்கு நாடாளுமன்றத்தை பிரான்ஸ் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்