சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் கைதான ஜாஃபர் சாதிக், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்த அமலாக்கத் துறையின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.