நீலகிரி மாவட்டம் உதகை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கொல்லிமலை பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டெருமைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
உதகையிலிருந்து காந்தி பேட்டை, கொல்லிமலை வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையில், 50-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு காட்டெருமைக் கூட்டம் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இதனைத்தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.