காஞ்சிபுரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் குத்திய ரவுடி உள்ளிட்ட 3 பேரை லீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மைஃப்புஜா என்பவர் வினோத் என்பவர் நடத்தி வரும் அசைவ உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.
உணவகம் நேரம் முடிந்த பின்னர் மைஃப்புஜா சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ரவுடி உதயா அவரது நண்பர்கள் சிலர், மைஃப்புஜாவிடம் தகராறு செய்ததோடு, அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில், படுகாயம் அடைந்த மைஃப்புஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தப்பியோடிய ரவுடி உதயா அவரது நண்பர்கள் அண்ணாமலை, சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.