தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பானி பூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சாயம் கலந்த உணவுகளை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும், பானிபூரிக்கு வழங்கப்படும் மசாலா நீரில், உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சாயம் கலந்து விற்கப்பட்ட சிக்கன், காலிபிளவர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.