திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
இக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை திருமஞ்சனம் எனும் கோயிலை சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நடைபெற்ற திருமஞ்சன நிகழ்வில், தேவஸ்தான ஊழியர்கள் இணைந்து கோயிலை முழுவதும் சுத்தம் செய்து, பல்வேறு வகையான நறுமண கலவைகளை சுவர்களில் தெளித்தனர்.