தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே பாலத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
தமிழன் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 25 பேருடன் தூத்துக்குடியில் உள்ள கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தார்.
எட்டையபுரம் காவல் நிலையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த ஈஸ்வரன், ராமலட்சுமி உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர்.