உலக அளவில் இந்தியாவை 3-ஆவது பொருளாதாரமாக மாற்றுவதே தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி, கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இந்தியாவை உலக அளவில் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் முனைப்பில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டவும், லட்சாதிபதி பெண்கள் திட்டத்தின்கீழ், கிராமப்புறத்தில் வசிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக்கவும் இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல்அவர்கள் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.