மாறிவரும் இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய அவர், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை நிறுத்தி, எந்தவொரு நாடும் செய்யாத சாதனையை இந்தியா நிகழ்த்தியதாக குறிப்பிட்டார்.
நம்பகமான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும், புதிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ஆம் இடத்தில் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதிலும், ஆய்வறிக்கை தாக்கல் செய்வதிலும் இந்தியா மகத்தான சாதனை படைத்ததாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களை உலக நாடுகள் வியப்புடன் பார்ப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.