உலக அளவில் குடியேற்றத்துக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக வியட்நாம் முதலிடம் பிடித்துள்ளது.
மக்களின் வாழ்க்கைத் தரம், வீட்டுவசதி, ஊதியம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், வியட்நாம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்தில் உள்ளது. குடியேற்றத்துக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஆறு நாடுகள் ஆசியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.