புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்ட நிர்மல் குமார் சுரானா, அங்குள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிரவாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார் சுரானா,
புதுச்சேரியில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்டு அதிகளவு வாக்குகள் பெற்றுள்ளது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலிலும், அதன் பிறகும் முதலமைச்சர் ரங்கசாமி உடனான கூட்டணி தொடரும் எனவும் கூறினார்.