உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான விபத்திற்கு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், அதிகாரிகளுமே முக்கியக் காரணம் என சிறப்பு புலனாய்வுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு 300 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
விபத்தின் பின்னணியில் எந்த சதியும் இல்லை எனவும், கூட்ட நெரிசலே இவ்விபத்திற்குக் காரணம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்தை போலே பாபா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவிர்த்திருக்கலாம் எனவும், கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.